Car Checks Sri Lanka's first & only dedicated specialized vehicle inspection center.
Home / எம்மை பற்றி
ஜன் செல்லய்யா மற்றும் தேஷான் டி சில்வா ஆகியோரின் சிந்தனையின் பின்னணியில் 2010 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் ஈவ் அன்று Car Checks நிறுவப்பட்டது. காலப்போக்கில் அவர்கள் தங்கள் தொழிநுட்ப அமைப்பை விரிவுபடுத்தி, தற்போது காரினை பகுதிகளாக கழற்றாமல் விரிவாக பரீட்சிப்பதற்கான கட்டமைப்பை அமைத்துள்ளனர். இலங்கை கார் வர்த்தக சந்தையில் நாணயத்தன்மையை கொண்டுவருவதும், ஒரு வாகனத்தை வாங்குவதற்கோ அல்லது விற்பதற்கோ முன்னர் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் ஆன்லைன் Car Check ஆய்வு அறிக்கையை சமனாக பெறக்கூடிய இயலுமையை ஏற்படுத்தி வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையை உருவாக்குவதே ஸ்தாபகர்களின் தூரநோக்காக அமைந்துள்ளது. இந்த செயல்முறையை அனைவருக்கும் ஏற்ற விலையில் மற்றும் அனைவரும் பயன்படுத்தக்கூடியதாகவும் வைத்திருப்பதுடன், சர்வதேச தரங்களுக்கு மேலாக ஒரு பரீட்சிப்பு சேவையினை வழங்குவதும் எமது முன்னுரிமையாகும், இதன் விளைவாக எமது நிறுவனம் ஒன்று மாத்திரமே 230 மேற்பட்ட புள்ளிகளை உள்ளடங்கிய அச்சிடப்பட்ட அறிக்கையை வழங்கும் நிறுவனமாகும். Car Checks இலங்கையின் முதலாவதும் மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரே வாகன பரிசோதனை மையமாக இருப்பதிலும் பெருமிதம் கொள்கின்றது. இதனால் உங்கள் வாகன பரிசோதனையில் முழுமையாக கவனம் செலுத்தப்படுவதுடன் நம்பகமானதும் பக்கச்சார்பற்ற அபிப்பிராயத்தை பெற்றுக்கொள்ளவும் முடியும். உங்களுக்கு அடுத்த தசாப்தத்தில் சேவை செய்யவென நாம் இங்கு உள்ளோம்.
Our Strategic Partners
Copyright © 2020 - 2025 Car Checks
Website By JM